எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது: எழுத்தாளர் முருகேசுக்கு பால புரஸ்கர் விருது

0 2795

எழுத்தாளர் அம்பை என்ற சி.எஸ். லட்சுமிக்கு 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதை தொகுப்புக்காக அவர் இந்த விருதை பெற உள்ளார்.

வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் போன்ற நூல்களையும் அம்பை எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெறுவோருக்கு பரிசுத்தொகையாக ஒரு லட்ச ரூபாயும், தாமிர பட்டயமும் வழங்கப்படுகிறது.

24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல் போன்ற பலவகையான படைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் முருகேசுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments