2022 இனிதாக அமைய வேண்டி பெருவில் உள்ள மலையில் விநோத வழிபாடு.!

0 3279

ஆவிகளுடன் பேசும் ஆற்றல் உள்ளதாக கூறும் குழுவினர், பெரு நாட்டின் மலைப் பகுதியில் ஒன்று திரண்டு, 2022 புத்தாண்டு இனிதாக அமைய வேண்டி விநோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தலைநகர் லிமா அருகேயுள்ள சான் கிறிஸ்டோபல் மலையில் அணிதிரண்ட அவர்கள், ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார சிக்கல் ஏற்படும் என்றும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு முயற்சி வெற்றி பெறாது, என்றும் தெரிவித்தனர்.

மேலும், ஜோ பைடன், புடின் உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு நல்ல சிந்தனையை தர வேண்டும் என்றும், உலகில் கொரோனா தொற்று ஒழியவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு, இந்த வழிபாட்டை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விநோத வழிபாட்டை அவர்கள் நடனமாடியும் சங்கு ஊதியும் மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments