2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்.. இந்த நிலைமை எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது.. தாய் கண்ணீர் மல்க வீடியோ.!

0 7207

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இரண்டு வயது குழந்தையை நான்கு தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறிய நிலையில், தன் போன்றதொரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது என குழந்தையின் தாய் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

சபரிநாத் - தமிழரசி தம்பதியின் 2 வயது மகன், சில நாட்களுக்கு முன் நெய்வேலி மெயின் பஜாரிலுள்ள கோல்டன் ஜூப்ளி பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

தாத்தாவுடன் பூங்காவுக்கு சென்றிருந்த அந்த குழந்தையை, 4 தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறியதாக கூறப்படுகிறது. தற்போது புதுச்சேரியில் பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தெருநாய்களால் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குழந்தைகளை பொது இடங்களில் தனியாக விடக்கூடாது எனவும் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments