டெல்லியில் கொரோனா தொற்றாளர்களில் சுமார் 46 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு.!

0 2366

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரிடம் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 46 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் மரபியல் பகுப்பாய்வு சோதனையில் வெளிநாடுகளுக்கு பயணிக்காதவர்கள் உள்ளிட்டோரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய வகை வைரஸ் படிப்படியாக சமூகப் பரவலாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்றும் தெரிவித்தார். டெல்லியில் டிசம்பர் 20ஆம் தேதி 91 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், நேற்று சுமார் 923 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments