கன்னியாகுமரியில் நடந்து சென்றவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.1,500 வழிப்பறி.. ரவுடி கைது

0 2226

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட விருதுநகரை சேர்ந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

நெய்யூர் வடக்கு தெருவை சேர்ந்த ஜெபராஜ் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நேற்றிரவு நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஜெபராஜ் சட்டை பையில் வைத்திருந்த ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றான்.

இதுகுறித்து ஜெபராஜ் உடனடியாக இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தப்பியோடிய மர்ம நபரை இரணியல் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அந்த மர்ம நபர், விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த சேர்மராஜ் என்பதும்  இவர் மீது 2 கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments