கோயம்புத்தூர் விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 2.2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்

0 6666

சார்ஜாவில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்த விமானத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த இரண்டு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று அதிகாலை 4:00 மணி அளவில் சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமான பயணிகளை சுங்கத்துறையினர் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த நசரூதீன் முகமது மற்றும் அவரது சகோதரர் கலீல் ரகுமான் முஸ்தபா ஆகியோரை சோதனை செய்த போது அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து சுமார் ஒரு கோடி மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments