புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி.. கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை- காவல்துறை

புதுச்சேரியில், கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நாளை பிற்பகல் 2 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி காலை வரை கடற்கரை சாலையையொட்டியுள்ள செஞ்சி சாலைக்கு கிழக்கு புறத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும்
வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக சிவப்பு நிற வாகன நுழைவு அட்டை வழங்கப்படும் என்றும் அதனை பயன்படுத்தி அப்பகுதி மக்கள் வெளியே செல்லலாம்.
மேலும், புதுச்சேரி நகரப்பகுதிகளில் நாளை பிற்பகல் 2 மணி முதல் கனகரக வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு செல்லக்கூடிய 30க்கும் மேற்பட்ட இணைப்பு சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments