ஆப்கானிஸ்தானின் ராணுவ வீராங்கனைகள், தாலிபன் ஆட்சியில் தங்கள் உயிர்களைக் காக்க தங்களது அடையாளங்களை அழித்துவிட்டு தப்பிச் செல்ல முயற்ச்சி.!

0 2776

மேற்கத்திய உலகினரால் புகழப்பட்ட, ஆப்கானிஸ்தானின் ராணுவ வீராங்கனைகள், தாலிபன் ஆட்சியில் தங்கள் உயிர்களைக் காக்க அடையாளங்களை அழித்துவிட்டு தப்பிச் செல்ல முயல்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆப்கானை கைப்பற்றிய போது, 26 வயதான ஷாமிமா என்ற பெண் தனது தோட்டத்தில் பள்ளம் தோண்டி ஆப்கான் விமானப்படை சீருடையை புதைத்து விட்டார். தனது கடந்த காலத்தை மறைத்து விட்டதாக அவர் நினைத்த நேரத்தில் சில நாட்களுக்குள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

பதற்றம் அடைந்த அவர் சிம்கார்டை தூக்கியெறிந்து வீட்டை விட்டு தப்பிச் சென்றார். தன் பெற்றோரை தாலிபன்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

இது போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் தாலிபன்களின் மிரட்டலுக்கு ஆளாகி நிச்சயமற்ற எதிர்காலத்துடன் வாழ்கின்றனர். அவர்களின் கடந்த காலங்கள் தேடியெடுக்கப்பட்டு விசாரணைகள் நடைபெறுகின்றன.கடும் ஆபத்தை எதிர்கொண்டு வாழ்வதாக அவர்கள் கூறுகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments