பிலிப்கார்ட்டில் ஆர்டர் செய்தது செல்.. பார்சலில் வந்தது கல்.. நல்லா இருக்குடா ஆன்லைன் டீலிங்.!

0 8190

வேலூரில் பிளிப்கார்ட்டில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு, பார்சலில் செல்போன் கவருக்குள் டைல்ஸ் கல் அனுப்பப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

வேலூர் மாவட்டம் பசுமாத்தூரைச் சேர்ந்தவர் மோகன் இவர் தனது சகோதருக்காக y21 vivo என்ற ஸ்மார்ட் போனை 13399 ரூபாய் விலையில் கடந்த 11 ந்தேதி பிலிப்கார்டில் ஆர்டர் செய்துள்ளார்.

19ந்தேதி அவரது வீட்டிற்கு ஒரு கவரில் பார்சல் வந்தது. வழக்கமான பாக்ஸ் பார்சல் இல்லாமல் சாதாரண ஃபிளிப்கார்ட் கவரில் பார்சல் டெலிவரி செய்யப்பட்டதால் சந்தேகம் அடைந்த மோகன் தான் அந்த கவரை வீடியோ பதிவு செய்து கொண்டே பிரித்தார்

மோகன் ஆர்டர் செய்தது விவோ ஆனால் உள்ளே ஓப்போ நிறுவன பாக்ஸ் இருந்தது. அந்த பாக்ஸுக்கு உள்ளே செல்போனுக்கு பதிலாக உடைந்து போன டைல்ஸ் கல் ஒன்று வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு மோகன் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக ஃபிளிப்கார்ட்டின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தார். அவர்களும் 3 முறை பொருளை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறி டெலிவரிபாயை அனுப்புவதாகக் கூறி விட்டு, 29 ந்தேதியுடன் அதற்கான காலக்கெடு முடிந்து விட்டதாக கூறி நழுவிக் கொண்டனர்.

இதனால் செல்லுக்காக செலுத்திய 13,399 ரூபாய்க்கு , கிடைத்த உடைந்த கல்லையும் கவரையும் கையில் வைத்துக் கொண்டு யாரிடம் பணத்தை திரும்ப கேட்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார் மோகன்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments