மும்பையில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் இரட்டிப்பாகி புதிதாக 2510 பேர் பாதிப்பு..!

0 2863

மும்பையில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் இரட்டிப்பாகி புதிதாக 2510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 85 பேரிடம் ஒமைக்கரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மும்பையில் கொரோனா மூன்றாவது அலை தோன்றி விட்டதாகவும் இன்றும் 2 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

டெல்லி, குஜராத்,மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களிலும் மும்பை போன்ற பெருநகரங்களிலும் கொரோனாவின் உருமாறிய வைரஸ் ஒமைக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் ஒமைக்கரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே டெல்லியில் புதிதாக 923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், திரையரங்குகள், மால்கள் பள்ளி, கல்லூரிகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments