காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

0 1612

காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகின்ற புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு விற்பனை குறித்து காதி கிராப்ட் ஊழியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காதிகிராப்ட் கடை ஊழியரான சையத் சம்சுதீன் கலந்து கொண்டார்.

இந்நிலையில்,திடீரென்று மூச்சுவாங்கி மயங்கி விழுந்த சையத் சம்சுதீனை உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ், தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸை வர வைத்தனர். இதையடுத்து, ஆம்புலன்சில் முதற்கட்ட பரிசோதனை செய்தபோது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments