இந்தியாவில் 1000.ஐ நெருங்கும் ஒமைக்ரான் பாதிப்பு.!

0 2682

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 3900 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அதில் 85 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று ராஜஸ்தானில் மேலும் 23 பேருக்கும், குஜராத்தில் 19 பேருக்கும், டெல்லியில் 73 பேருக்கும், பஞ்சாப்பில் முதன்முறையாக ஒரு நபருக்கும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 46 ஆக அதிகரித்தது. அதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments