ஊர் ஊரா சாமி ஆடுவாராம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாராம்… அன்னபூரணி பின்னணியில் இருப்பது இவர்..!

0 18564

ஆதிபராசக்தி என்றும் திவ்யதரிசனம் தருவதாகவும் கூறி இந்து மத பெண் தெய்வங்களை இழிவுபடுத்தும் அன்னபூரணி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இந்து அமைப்புகள் போலீசில் புகார் அளித்த நிலையில், அன்னபூரணி தனது வழக்கறிஞருடன் காவல் ஆணையர் அலுவலகம் வந்தார். செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லாமல் சமாளித்து ஓட்டம் பிடித்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

ஒரு காலத்தில் அன்னபூரணியின் ஆன்மீக ஆராய்ச்சிகாக முதல் கணவரிடம் கும்மாங்குத்து வாங்கி, கிழிந்த டி சர்ட்டுடன் காட்சியளிக்கும் இவர்தான் அன்னபூரணியின் ஆன்மீக ஆராய்ச்சி காதலன் அரசு..!

கோவை தொண்டாமுத்தூரில் இயற்கை ஒளி பவுண்டேசன் அமைத்து சக்தியை உருவாக்கிய அரசுவுக்கு ஒரு பாயசத்தை போட்டு பளிங்கு சிலை வைத்து வழிபட்டு வந்த அன்னபூரணியின் கடவுள் அவதார நாடகத்துக்கு புது ரூட்டு போட்டு கொடுத்தவர் வேறு யாருமல்ல தற்போது காலில் விழுந்து கிடக்கிறாரே இந்த ரோகித் தான் ..!

கடந்த 19 ந்தேதி செங்கல்பட்டில் நடந்த கூட்டத்துக்கு திடீர் பக்தர்களால் ஏற்பாடு செய்த ரோகித், அன்னபூரணியின் சக்தியினால் அழுவது போல நடித்து காலில் விழுந்துள்ளார்

பின்னர் தான் அழைத்து வந்திருந்த டிராமா கோஷ்டியை சேர்ந்த ஒவ்வொருவரையும் காலில் விழவைத்த ரோகித், அதனை தனது செல்போனில் விழுந்து விழுந்து வீடியோ எடுப்பது அவர்கள் விளம்பரத்துக்காக வெளியிட்டுள்ள வீடியோ மூலமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது

அன்னபூரணியின் இந்த திடீர் அவதார அட்ராசிட்டி ,இந்து மத பெண் தெய்வங்களை இழிவுபடுத்தும் செயல் என்றும் அன்னபூரணியின் செயல் மத உணர்வை புண்படுத்துவதாகவும் கூறி பாரத் முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்

அதே போல அன்னபூரணியின் செயல் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் முயற்சி என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டிய நிலையில் தான் எங்கிருக்கிறேன் என்பதை சொல்லாமல் தலைமறைவாக சுற்றி வந்த அன்னபூரணி, தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி வழக்கறிஞருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார் . எப்போதும் அவருடன் வலம் வரும் ரோகித் காவல் ஆணையர் அலுவலகம் வரவில்லை. அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினர், எதையெல்லாம் முன்பு செய்தாரோ அதை எல்லாம் இல்லை இல்லை என மறுத்தார் அன்னபூரணி

கடந்த வாரம் வரை தன்னை பராசக்தி என்று அடையாளப்படுத்திக் கொண்டு தனது படத்தை பிரேம் போட்டு பக்த கோடிகளுக்கு பிரசாதமாக வழங்கிய அன்னபூரணி அரசு அம்மா தற்போது தான் அப்படி சொல்லவே இல்லை என்று அந்தர் பல்டி அடித்தார்

புத்தாண்டையொட்டி திவ்யதரிசனம் தரப்போவதாகவும் நோய்களை தீர்க்கபோவதாகவும் சமூக வலைதள விளம்பரத்தில் அள்ளிவிட்ட போலி டாக்டர் அன்னபூரணி தற்போது தான் அப்படி சொல்லவே இல்லை என்று குட்டிக்கரணம் அடித்துள்ளார்

அன்னபூரணி அம்மையாரின் கடந்த கால காதல் சம்பவங்கள் அம்பலமானதால், தான் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லவில்லை , ஆசி வழங்கவில்லை, ஆன்மீக பணியில் தீட்சை மட்டுமே கொடுப்பதாக பதறினார்

பக்தர்களை காலில் விழவைத்து கதறவிட்ட நாடகம் குறித்து கேள்வி எழுப்பிய போதும் உரிய பதில் சொல்லாமல் சமாளித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments