தேனியில் பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலியாக தனியாருக்கு பட்டா மாறுதல் செய்து கொடுத்தது தொடர்பாக பதியப்பட்ட 3 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்.!

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் உள்ள மூன்று கிராமங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலியாக தனியாருக்கு பட்டா மாறுதல் செய்து கொடுத்தது தொடர்பாக பதியப்பட்ட 3 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் முதல் வருவாய் வட்டாட்சியர் வரை பல்வேறு நிலைகளில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் தனி நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதால், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
Comments