மதுரையில் வரதட்சணைக்காக, கர்ப்பிணி மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவன் கைது.!

0 17230

மதுரை மாவட்டத்தில், காதலித்து கரம் பிடித்த பெண்ணை, கர்ப்பிணி என்றும் பாராமல் மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர்.

சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த கணபதி ராஜா, 7 மாதங்களுக்கு முன்  நாகலட்சுமி என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த திங்கட்கிழமை, நாகலட்சுமி மாடியில் துணி காய வைத்துகொண்டிருந்த போது தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 5 மாத கர்ப்பிணியாக இருந்த நாகலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் போலீசில் புகாரளித்தார்.

இது குறித்து கணவன் கணபதி ராஜாவிடம் போலீசார் விசாரித்த போது, நாகலட்சுமியை மணந்துகொள்ள அவரது சகோதரர்களிடம் 10 சவரன் நகை வரதட்சணையாகக் கேட்டதாகவும், அதனை அவர்கள் தர மறுத்த போதும் நாகலட்சுமியை மணந்து கொண்டதாகவும், இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், வரதட்சணை கிடைக்காத விரக்தியில் நாகலட்சுமியை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

10 சவரன் நகைக்காக, 5 மாதம் கர்ப்பமாக இருந்த காதல் மனைவியை கணவனே கொலை செய்தது கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments