கோவையில் தனியார் கல்லூரி அருகே நடமாடிய சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள்.!

0 17276

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை, கல்லூரியின் பின்புறத்தில் நாயை கடித்துக் கொன்ற நிலையில், ஏற்கனவே அப்பகுதியில் சிறுத்தை உலாவிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பிள்ளையார்புரம், கோவைபுதூர் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடுவதாக அப்பகுதி மக்கள் கூறிவரும் நிலையில், நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. கல்லூரிக்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை உறுதிப்படுத்தினர். சிறுத்தை நடமாட்டத்தால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments