கள்ளக்குறிச்சியில் சாலையின் குறுக்கே வந்த பன்றி மீது பைக் மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்த நபரின் சிசிடிவி காட்சிகள்.!

0 9044

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் சாலையின் குறுக்கே வந்த பன்றி மீது, பைக்கில் சென்றுக்கொண்டிருந்த நபர் மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செங்கணங்கொல்லை கிராமத்தை சேர்ந்த ஒருவர், வேலைக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த பன்றி ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது வேகமாக வந்த அந்த நபரின் பைக் பன்றி மீது மோதியதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், காயமடைந்த நபர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பைக்கில் வந்த நபர் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments