அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக வைரலாகும் வீடியோ..!
கோவையில் அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது.
இந்த கோயிலில் 40-ம் ஆண்டு மண்ட பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலைக்கு நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
அப்போது அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக கூறி, பக்தர் ஒருவர் செல்போனில் பதிவு செய்த வீடியோ வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Comments