சென்னையில் இருந்து துபாய்க்கு ரூ.5.76 கோடி மதிப்புள்ள வைரங்கள் கடத்தல்.. டெலஸ்கோப்பில் மறைத்து கொண்டு எடுத்து சென்ற போது பறிமுதல் !

0 2165

சென்னையிலிருந்து துபாய்க்குத் தொலைநோக்கிகளில் மறைத்து வைத்து  விமானத்தில் கடத்த முயன்ற ஐந்தே முக்கால் கோடி ரூபாய் மதிப்புடைய வைரக்கற்களைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து துபாய்க்குச் செல்லவிருந்த பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதித்தனர். பயணி ஒருவர் வைத்திருந்த தொலைநோக்கிகளின் கைப்பிடிகளுக்குள் பட்டை தீட்டி மெருகூட்டப்பட்ட வைரக்கற்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

ஆயிரத்து 52 காரட் வைரக்கற்களைப் பறிமுதல் செய்ததுடன், அந்தப் பயணியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பட்டை தீட்டாத வைரக்கற்களை இந்தியாவுக்குக் கடத்தி வந்து, இங்குப் பட்டை தீட்டி மெருகூட்டி மீண்டும் வெளிநாட்டுக்குக் கடத்த முயன்றபோது பிடிப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.

காங்கோவில் இருந்து சென்னைக்குப் பட்டை தீட்டாத 718 காரட் வைரங்களைக் கடத்தி வந்த மும்பை இளைஞரைச் சுங்கத்துறையினர் பிடித்ததாகவும், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் இந்த வைரக்கற்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments