40-துடன் தவறான உறவில் இருந்த 24..! சேர்ந்து வாழ வற்புறுத்தியதால் பெண்ணை கொன்ற இளைஞன்

0 8876

நாமக்கல்லில் 40 வயது பெண்ணுடன் தவறான உறவில் இருந்த 24 வயது இளைஞன் ஒருவன், ஒன்றாக சேர்ந்து வாழலாம் என அப்பெண் வற்புறுத்தியதால் அவரை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொசவம்பட்டி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் கடந்த 23ஆம் தேதியன்று அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த லலிதா என்பது தெரியவந்தது. 40 வயதான லலிதாவின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் என்ற 24 வயது இளைஞனுடன் லலிதா தவறான உறவில் இருந்ததும் அவ்வப்போது சுரேந்தர் அவரது வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது.

ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என சுரேந்தரை லலிதா வற்புறுத்தி இருக்கிறார். இது தொடர்பாகக் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், லலிதாவை அடித்து கொலை செய்து விட்டு சாக்கு மூட்டையில் கட்டி சடலத்தை கிணற்றில் வீசியதாக சுரேந்தர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments