புதுக்கோட்டையில் 750 பவுன் நகை கொள்ளைபோன சம்பவத்தில், அதே வீட்டின் கிணற்றிலிருந்து நகைகளை மீட்ட போலீசார்.!

0 15871

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினத்தில் 750 பவுன் நகை கொள்ளைபோன சம்பவத்தில், அதே வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து நகைகளை போலீசார் மீட்டனர்.

புருனே நாட்டில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வரும் ஜகுபர் சாதிக் என்பவரின் வீட்டை, அவரது உறவினர்கள் பராமரித்து வந்தனர். இந்நிலையில், வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அவரது சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் மோப்பநாய் உதவியுடன், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வீட்டின் பின்புறமுள்ள உறை கிணற்றில், ஜகுபர் சாதிக்கின் உறவினர்களும் போலீசாரும் பார்த்தபோது, அதில் ஒரு கேரி பேக் இருந்ததை கண்டு வெளியே எடுத்தனர்.

அதில் கொள்ளைபோன நகைகளில் 559 பவுன் இருந்ததை அடுத்து அவை மீட்கப்பட்டது.
இதனிடையே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நகைகள், மீமிசல் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஓப்படைக்க உள்ளதாக டிஎஸ்பி தினேஷ்குமார் தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments