இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக்குழு எச்சரிக்கை

0 4449

இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக்குழு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 3 வாரங்களாக இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 9,195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கும் Covid-19 India tracker-ஐ வடிவமைத்த கேம்பிரிட் பல்கலைக்கழகத்தினர், மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்புகள் கணிசமாக அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த நிலை சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments