பீகாரில் போலீசாரின் கண்முன்னே நகைக்கடை உரிமையாளரிடம் இரு சக்கர வாகனத்தில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்.!

0 1975

பீகார் மாநிலம் கயாவில் போலீசாரின் கண்ணெதிரேயே தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து நகைப்பையை கொள்ளையர்கள் கொள்ளையடித்து செல்லும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோட்வாலி காவல்நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஜிபி சாலையில் போலீசார் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நகைக்கடை உரிமையாளர் கோபால் பிரசாத், கையில் 8 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடங்கிய நகைப்பையுடன் கோல்பதர் வளைவில் இருந்து கோட்வாலி காவல்நிலையம் நோக்கி நடந்து சென்றார்.

அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் நகைப்பையை பிடுங்கி கொண்டு வேகமாக சென்றனர். அந்த வாகனத்தை பிடிக்க முயன்ற கோபால் பிரசாத், கை நழுவியதால் கீழே விழுந்தார்.

இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் அதனை அடிப்படையாக கொண்டு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments