புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

0 3144

புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து மதுக் கடைகள், பார்களில் டிசம்பர் 31 தேதி இரவு 10 மணி முதல் ஒரு மணி வரை மது விற்கவும், வழங்கவும் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்றுப் பரவி வரும் சூழலில் புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி ஜெகன்நாதன் என்பவர் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு அறிவித்துள்ள விதிகளின்படி மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடைபெறும் கொண்டாடங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments