’நான் சாமியார் இல்லை’ என்னை உணர்ந்தவர்களுக்கு எனது ஆன்மீகம் பற்றி தெரியும் - அன்னபூரணி

0 4731

தனக்கும், தனது சீடர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆன்மீக சேவகி எனக் கூறிக் கொள்ளும் திடீர் பெண் சாமியார் அன்னபூரணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரளிக்க வந்த அன்னபூரணியிடம், அவர் மீது ஏற்கனவே இந்து அமைப்புகள் அளித்த புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திடீர் சாமியார் அன்னபூரணியிடம், வீடியோக்களில் சிலர் அவர் காலில் விழுந்து மன்றாடி வணங்குவதையும், ஆசி வழங்குவது போல் கிராபிக்ஸில் பில்டப் காட்டுவதையும் சுட்டிக்காட்டி இது தான் ஆன்மீக பயிற்சியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு  பதிலளிக்காமல் மழுப்பிய அன்னபூரணி, தர்மமே வெல்லும், சத்யம் ஜெயிக்கும் என கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு நழுவினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments