ஜார்க்கண்ட் - பெட்ரோல் விலை ரூ.25 குறைப்பு..! அதிரடி அறிவிப்பு

0 3911

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்படுவதாக  முதலமைச்சர் ஹேமந்த்சோரன் அறிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். வரும் ஜனவரி 26 ஆம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என்றும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

அதிகபட்சமாக மாதம்10 லிட்டர் பெட்ரோலை ரேசன் கார்டு வைத்துள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், லிட்டருக்கு 25 ரூபாய் வீதம் 250 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் ஹேமந்த்சோரன் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments