கேரளாவில் பேருந்து ஓட்டுநரை மாணவர்கள் தாக்கிய காட்சிகள் தமிழகத்தில் நடந்ததாக கூறி, அவதூறு பரப்பிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.!

0 2568

கேரளாவில் பேருந்து ஓட்டுநரை மாணவர்கள் தாக்கிய காட்சிகள் தமிழகத்தில் நடந்ததாக கூறி, அவதூறு பரப்பிய விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் நடந்த சம்பவத்தை தமிழகத்தில் நடந்ததாக கூறி தவறான தகவல்களை பரப்பியதோடு, அதனை முதலமைச்சருடனும், தமிழக அரசுடனும் தொடர்புபடுத்திய பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி நிர்வாகி அளித்த புகாரின் பேரில் போலி வீடியோவை வெளியிட்டு அவதூறு பரப்பியது உட்பட 4 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அத்தோடு, குறிப்பிட்ட வீடியோவை பரப்பிய நபர்களின் விபரங்களை கேட்டு சமூக வலைதள நிறுவனங்களுக்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments