வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை.. தடயங்கள் சிக்காமல் இருக்க வீட்டை கொளுத்திவிட்டு தப்பிச்சென்ற மர்மநபர்கள்

திண்டுக்கலில் வீட்டின் பூட்டை உடைத்து, 25 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள், தடயங்கள் சிக்காமல் இருக்க வீட்டிற்குள் தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநகரில் வசித்து வரும் தலைமை தபால் நிலைய உதவி அதிகாரியான மணிமாறன், மனைவி உடன் அதேபகுதியில் வசிக்கும் அவரது மகன் வீட்டில் ஒருவாரமாக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை நோட்டமிட்டு அறிந்த மர்மநபர்கள்,நள்ளிரவில் பூட்டை உடைத்து நகைகளை திருடிவிட்டு காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க பீரோவில் இருந்த பத்திரங்கள், சான்றிதழ்கள், பட்டுப்புடவைகள், கணினி உள்ளிட்ட பொருட்களை இரண்டு படுக்கை அறைகளில் பரவலாக வைத்து தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
Comments