மதுரையில் மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மரங்களின் மீது ஏறி நின்று உடலை பிளேடால் கிழித்துக் கொண்ட கைதிகள்.!

0 5278

மதுரை மத்திய சிறையிலுள்ள கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சுற்றுச்சுவருக்கு வெளியே கற்களை வீசியதால், சிறையை ஒட்டிய சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மதுரை மத்திய சிறையில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 

சிறையின் முதல்தளத்தில் அடைபட்டிருக்கும் பழைய கைதிகளுக்கும், அண்மையில் திருச்சியிலிருந்து அழைத்து வரப்பட்ட கைதிகளுக்கும் இடையே திடீர் வாக்குவாதமும் தொடர்ந்து மோதலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒருவரை ஒருவர் கற்களாலும் பாட்டில்களாலும் தாக்கிக் கொண்டவர்கள், சுற்றுச்சுவர் அருகேயுள்ள மரங்களின் மீது ஏறி நின்றவாறு உடலை பிளேடால் கிழித்துக் கொண்டனர். மோதலின் போது சுவருக்கு வெளியேயும் கற்களை வீசியுள்ளனர். இதனால் சிறையை ஒட்டிச் செல்லும் சாலையில் கற்கள் வந்து விழுந்தன. இதனையடுத்து, அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments