நாமக்கல் ரூ. 1,000 லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுனரை கையும் களவுமாகக் கைது செய்த போலீசார்.!

0 5179

நாமக்கல் மாவட்டத்தில், தோட்டத்திற்க்கு மின் இணைப்பு பெறத் தேவைப்படும் தடையில்லா சான்று வாங்கித் தருவதாகக் கூறி 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுனரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

செல்வம் என்பவர் தன்னுடைய தோட்டத்திற்கு 100 மீட்டர் சுற்றளவில் அரசு போர்வெல் இல்லை என தடையில்லாச் சான்று கோரி புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அங்கு ஓட்டுனராகப் பணியாற்றிய பிரபாகரன் என்பவர் வேலையை முடித்து தருவதாகக் கூறி 1000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்த செல்வம், அவர்கள் அளித்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரபாகரனிடம் கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரபாகரனை கைது செய்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments