முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க டெல்லி விரைந்தது தனிப்படை

0 2771

அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.

பண மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க, 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 13ஆவது நாளாக ராஜேந்திராபாலாஜியை தேடி வரும் தனிப்படை போலீசார், கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சியில் முகாமிட்டுள்ளன.

இந்த நிலையில், ராஜேந்திரபாலாஜியுடன் தொடர்பில் இருந்து அவருக்கு உதவுவதாக, அதிமுகவினர் 2 பேரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments