நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு அனுப்பி வைத்த மசோதா பரிசீலனையில் உள்ளது ; ஆளுநர் மாளிகை

0 5607

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு அனுப்பி வைத்த மசோதா, பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் மாளிகை பதிலளித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெறுவதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மசோதா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?, மசோதாவின் தற்போதைய நிலை என்ன? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரின்ஸ் கஜேந்திரன் என்பவர் கடந்த மாதம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஆளுநர் மாளிகை, மசோதா பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments