புத்தாண்டு கொண்டாட்டம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது - டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

0 3214

புத்தாண்டு கொண்டாட்டம் - காவல்துறை கட்டுப்பாடு

தமிழ்நாடு முழுவதும் பீச்சுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது - எச்சரிக்கை

டிச.31ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்றுகூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி கட்டுப்பாடுகளை விதித்து, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது - தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் கைது செய்யப்படுவார்கள் - தமிழக டிஜிபி

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

டிச.31ஆம் தேதி நீண்ட தூரம் பயணிப்போர் இருசக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது

டிச.31 இரவு முதல் ஜன.1 அதிகாலை வரை, ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்

அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும், வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்

தமிழ்நாடு முழுவதும் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு

அவரவர் வீடுகளில், தங்கள் குடும்பத்தினருடன் புத்தாண்டை வரவேற்குமாறு டிஜிபி வேண்டுகோள்

தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள், உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்

ஓட்டல்களில், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய ஊழியர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும்

டிச.31 இரவில் கார் உள்ளிட்டவற்றில் பயணிப்பவர்கள் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை நிறுத்தி பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்

வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்து, அருகாமை காவல்நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்

வெளியூர் செல்பவர்களின் வீடுகள், ரோந்து காவலர்கள் மூலம் கண்காணிப்படும்

அவசர உதவிக்கு தேவைப்படுவோர் 100, 112 எண்களை தொடர்பு கொள்ளலாம் - தமிழக டிஜிபி

விபத்தில்லாமல், பாதுகாப்பாக, ஆங்கில புத்தாண்டை வரவேற்க, காவல்துறைக்கு பொதுமக்கள் உதவிட வேண்டும்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments