பாக்ஸ்கான் ஆலையைத் திறக்கும் முன் உயர்தரம் உறுதி செய்யப்படும் - ஆப்பிள் நிறுவனம்

0 2226

ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிற்சாலையைத் திறக்குமுன் அங்குப் பணிச்சூழல், தொழிலாளர் நலன் ஆகியன உயர்தரத்தில் உள்ளதா என்பது உறுதிசெய்யப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் தரக்குறைவான உணவை உண்டதால் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உயர்தரத்தை உறுதி செய்யும் வகையில் பாக்ஸ்கான் ஆலையின் நிர்வாகம் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக ஆப்பிள் நிறுவனச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆலையின் நிலைமையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், உயர் தொழில் தரத்தை உறுதி செய்த பின்னர்தான் ஆலை திறக்கப்படும் என்றும் ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments