மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ; சம்பவத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு தொடர்பு இருப்பதாக பொய் கூறும்படி மிரட்டியதாக சாட்சி

0 3308
யோகி ஆதித்யநாத்துக்கு தொடர்பு இருப்பதாக பொய் கூறும்படி மிரட்டல்

மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு தொடர்பு இருப்பதாக பொய் கூறும்படி, தீவிரவாத தடுப்பு படையினர் தன்னை மிரட்டியதாக அந்த வழக்கின் சாட்சி ஒருவர் கூறியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

2008 செப்டம்பர் 29-ம் தேதி மகராஷ்டிர மாநிலம் மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, அதன் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இதில், தீவிரவாத தடுப்பு படையினர் 2008 அக்டோபர் 28-ம் தேதி முதல், தன்னை ஒரு வாரமாக அவர்களது அலுவலகத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாகவும், தற்போதைய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் 5 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு எதிராக பொய் சாட்சி கூறும்படி மிரட்டியதாகவும், என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது சாட்சி ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் 220 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 15 பேர் பிறழ் சாட்சியாக மாறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments