டெல்லியில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு.. அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் 50 விழுக்காடு பயணிகள் மட்டும் அனுமதி

0 2011

டெல்லியில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அரசுப் பேருந்துகளிலும் மெட்ரோ ரயில்களிலும் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவதால், பல இடங்களிலும் நீண்ட வரிசை காணப்படுகிறது.

டெல்லியில் இருநூற்றுக்கு மேற்பட்டோர் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகப் பேருந்துகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பயணிகளை ஏற்றுவதுடன், நின்றுகொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

இதேபோல மெட்ரோ ரயில்களிலும் கட்டுப்பாடு விதித்துள்ளதால் அவற்றில் செல்வதற்காகப் பயணிகள் நெடுநேரம் வரிசையில் காத்துநின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments