இந்தியாவில் 780-ஐ தாண்டிய ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை!

0 3245

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 780ஐ தாண்டியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 283 பேருக்கும் மகராஷ்டிராவில் 167 பேருக்கும் குஜராத்தில் 73 பேருக்கும் கேரளாவில் 65 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்தமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட 781 பேரில், 241 பேர் குணமடைந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments