போலீஸ் என கூறி நள்ளிரவில் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்... ஒரு பெண் உட்பட 5 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸ் என கூறி நள்ளிரவில் வீட்டில் புகுந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையிலடைத்தனர்.
கடத்தூர் கிராம பேருந்து நிறுத்தம் அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் காரனூர் கிராம வீட்டில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கடலூரை சேர்ந்த உமாராணி மற்றும் மதுரையை சேர்ந்த கணேஷ் குமார், தினகரன் ஆகியோர் என தெரியவந்தது. மேலும், இவர்களிடமிருந்து தங்க நகை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய காரி-னையும் பறிமுதல் செய்தனர்.
Comments