விமானத்தில் இருந்து குதித்து வானத்தில் அதிகமுறை சுழன்று உலக சாதனை படைத்த இளைஞர்

0 3119

எகிப்தில் விமானத்தில் இருந்து குதித்து அந்தரத்தில் அதிக முறை சுழன்று இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞரான ஸ்னைடர் என்பவர் விசித்திரமான முறையில் உலக சாதனை படைக்க முயன்றார். இதற்காக எகிப்து சென்ற அவர் விமானம் மூலம் ஏறத்தாழ 13 ஆயிரத்து 500 அடி உயரம் சென்று அங்கிருந்து தனது நண்பர்களுடன் குதித்தார்.

அடுத்த நொடியே அந்தரத்தில் சுழலத் தொடங்கினார். 8 ஆயிரத்து 300 அடி வருவதற்குள் ஸ்னைடர் 160 முறை சுழன்று உலக சாதனை படைத்தார்.

பின்னர் 5 ஆயிரம் அடி உயரம் இருக்கும் போது பாராசூட்டை விரித்த அவர் பத்திரமாக கிஸா பிரமிட் அருகே தரையிறங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments