திருமணங்களாலும், வெளிநாட்டவர்களாலும் கோவாவில் அதிகரித்த கொரோனா

0 1858

திருமண நிகழ்வுகளாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாலும் கோவாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மாநிலத்தில் கொரோனா தொற்று விகிதம் கடந்த ஒரு வாரத்தில் 4 விழுக்காடு உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

லண்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களாலும், திருமணம் போன்ற நிகழ்வுகளாலும் சமீபத்தில் தொற்று அதிகரித்ததாகக் கூறியுள்ள அவர், லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பிரமோத் சாவத் அறிவுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments