இரு சக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்.! கத்தியால் குத்தி இளைஞர் கொலை- 2பேர் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
முத்துருனிசா பேகம் 7-வது தெருவை சேர்ந்த பயாஸ் என்கிற பாக்கர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தும் போது அதே பகுதியைச் சேர்ந்த 2பேரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பாக்கரிடம் இரவில் சண்டை போட்ட நபர்களான நூர் மற்றும் ரஹீம் ஆகியோர் மீண்டும் சண்டை போட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் நூர் கத்தியால் பாக்கரை வெட்டியுள்ளார்.
பதிலுக்கு பாக்கரும் கூர்மையான ஆயுத த்தால் ரஹீமை தாக்கியதில் இருவரும் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கர் உயிரிழந்தார். இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments