மலேசியாவில் போதைப் பொருள் கும்பலிடம் விற்கப்பட்ட மகனை மீட்டுத் தரக் கோரி தாய் கண்ணீர் மல்க மனு

0 1752

மலேசிய போதை பொருள் கும்பலிடம் விற்கப்பட்ட தனது மகனை மீட்டுத் தர வேண்டும் என்று தாய் ஒருவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

முத்து பட்டிபுதூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் கடந்த வருடம் மலேசியாவில் கோவில் வேலைக்கு ஏஜன்ட் சரவணன் மூலமாக புறப்பட்டு சென்றார். ஆனால் அங்கு சென்ற ஆனந்திற்கு கோவில் வேலை வழங்கப்படாதது மட்டுமின்றி போதை பொருள் கும்பலிடம் விற்கப்பட்டுள்ளார் .

மலேசிய காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு ஆனந்தை மீட்டுஅங்குள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில் அந்த இளைஞரை மீட்டு தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments