மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

0 3100

மும்பை டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 50 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மும்பையில் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கிய நிலையில் மீண்டும் அது  70 சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில்  1377 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று டெல்லியில் 500 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இங்கும் 50 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. இரண்டு நகரங்களிலும் தலா ஒருவர் வீதம் கொரோனாவால் உயிரிழந்தனர். மெட்ரோ நகரங்களில் மீண்டும் இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால் மக்கள் மிகுந்த கவலைக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் கெஜ்ரிவால் எல்லோருமே கட்டுப்பாடுகளால் சோர்வு அடைந்து விட்டோம். ஆனால் வேறு வழியில்லை என்று தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments