டெல்லி செங்கோட்டையை கார் வெடிகுண்டுடன் தகர்க்க சதித்திட்டம்.. கைதான ஜஸ்விந்தர் சிங் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலம்.!

0 2628

டெல்லி செங்கோட்டையை வெடிகுண்டுகள் நிரம்பிய காரைக் கொண்டு தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்புடன் இணைந்து தீவிரவாதிகள் நடத்திய சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஜஸ்விந்தர் சிங் முல்தானியிடம் அங்குள்ள அதிகாரிகள் விசாரணை நடத்திய போது தனது வாக்குமூலத்தில் அவன் தெரிவித்த பல தகவல்களை அந்நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளக்குத் தெரிவித்துள்ளனர்.

லுதியானா நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சீக்கியர் பிரிவினைவாத அமைப்பான ஜஸ்டிஸ் ஃபார் சிக்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த அந்த பயங்கரவாதி, பாகிஸ்தான் பின்னணியில் நடைபெற இருந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து விவரித்துள்ளான்.

பஞ்சாபில் ஆர்டிஎக்ஸ் வெடிப் பொருட்களை கடத்தி வர அவன் உதவியதாகவும், டெல்லியில் செங்கோட்டையைத் தகர்க்க காரில் வெடிகுண்டுகளை நிரப்பி அனுப்பியதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.

செங்கோட்டையைத் தாக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும் ஜஸ்விந்தர் சிங் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments