ரவுடியுடன் 3 வது காதல்.. கோடீஸ்வர பெண்ணை கொன்ற 2 வது கணவர்..! வாளால் வெட்டி வீசிய சிசிடிவி காட்சி.!
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி முக்கிய சாலையில் காரில் சென்ற கோடீஸ்வர பெண்ணை மறித்து, நடுசாலையில் வெட்டிக் கொன்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ரவுடி மீது காதல் கொண்டவர் கொலையான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
கர்நாடக மாநிலம் ஆனேகல் அருகே உள்ள ஜிகினி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. கோடீஸ்வரர் குடும்பத்தில் பிறந்த இவர், ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் கணவரை நீதிமன்றம் மூலம் பிரிந்து, வசதியில் உயர்ந்த நவீனைக் காதலித்து 2 வது திருமணம் செய்துகொண்டார்.
பெங்களூர் hsr லே அவுட் பகுதியில் கணவன் மனைவியாக எந்தவித பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வந்த நிலையில், அண்மையில் அர்ச்சனாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால், சந்தேகம் கொண்ட கணவன் நவீன் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார். இரண்டாவது கணவர் வீட்டில் வசித்து வந்தாலும் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவருடன் அர்ச்சனா ரெட்டி தவறான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை உருவானது. மேலும் அர்ச்சனாவின் பெயரில் உள்ள ஏராளமான சொத்துக்களை மாற்றி எழுதுவது தொடர்பாகவும் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு அர்ச்சனா ரெட்டி தனக்கு சொந்தமான காரில் ஆனைக்கல் அருகே உள்ள தனது சொந்த ஊரான ஜிகினிக்கு சென்றார். அவரது கார் ஜி கணிலிருந்து hsr லே-அவுட் வீட்டுக்கு திரும்பும்போது இரு சக்கரவாகனம் ஒன்றை காருக்குள் விட்டு மோதி காரை நிறுத்தி உள்ளனர்.
பெங்களூரு - ஓசூர் சாலை எலக்ட்ரானிக் சிட்டி அருகே காரை வழிமறித்த 2 வது கணவன் நவீன் மற்றும் கூட்டாளிகள் அர்ச்சனா ரெட்டியை காரிலிருந்து கீழே இறக்கி நீண்ட வாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த அர்ச்சனா ரெட்டி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அர்ச்சனா ரெட்டி உயிர் பிருந்தது உறுதி செய்த பிறகு நவீன் மற்றும் நண்பர் சந்தோஷ் அங்கிருந்து தப்பி சென்ற சம்பவத்தின் நேரடி வீடியோ காட்சி வெளியான நிலையில் ஒரு சில வாகன ஓட்டிகள் இதைக்கண்டு எலக்ட்ரானிக் சிட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அரசன ரெட்டி உடலை கைப்பற்றி ஆனைக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதற்கான காரணத்தை அர்ச்சனா ரெட்டியின் மகன் அளித்த புகாரின் பேரில் நவீன் அவரது நண்பர் சந்தோஷை வலைவீசி தேடி வருகின்றனர். மனம் விட்டு மனம் மாறும் காதலால் உந்தப்பட்டு 3 பேரை காதலித்ததால் கோடீவர பெண் அர்ச்சனா கொல்லப்பட்டதாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments