துணி உலர்த்தச் சென்ற கர்ப்பிணி பெண், மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

0 5301
துணி உலர்த்தச் சென்ற கர்ப்பிணி பெண், மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

மதுரையில் மொட்டை மாடியில் துணி உலர்த்தச் சென்ற கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சித்தூர் பகுதியைச் சேர்ந்த கணபதி ராஜா - நாகலட்சுமி தம்பதிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. நாகலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், திங்கட்கிழமை மொட்டை மாடியில் துணி உலர்த்தச் சென்றதாகவும் அப்போது கால் இடறி அங்கிருந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தங்கை நாகலட்சுமியின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அது கொலையாக இருக்கலாம் என்றும் அவரது அண்ணன் போலீசில் புகாரளித்துள்ளார்.

திருமணமாகி 7 மாதங்களே ஆவதால், வட்டாட்சியர் தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments