சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து ; நாய் மீது பைக் மோதியதால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த நபர்

0 3995
சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டினாயனப்பள்ளியில், சாலையில் பைக்கில் சென்றுக்கொண்டிருந்த நபர், குறுக்கே வந்த நாய் மீது மோதி நிலைத்தடுமாறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோஆபரேட்டிவ் காலனியைச் சேர்ந்த முபாரக், சாந்தி தியேட்டர் அருகே பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென சாலையின் ஓரம் நாய் வந்ததாக கூறப்படுகிறது. இதனை முபாரக் சுதாரிப்பதற்குள் நாய் மீது பைக் மோதியதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து தரதரவென இழுத்து செல்லப்பட்டார்.

அதேசமயம் பைக்கில் மோதிய நாய் அங்கிருந்து சென்றுவிட்டது. இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், காயமடைந்த முபாரக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் தொடர் விபத்துகள் ஏற்படுவதாக கூறும் அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments