வங்கியில் அடமானத்தில் இருக்கும் தனது நகையை மீட்க வந்த பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி ஒரு லட்ச ரூபாய் திருட்டு

0 3579
பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி ஒரு லட்ச ரூபாய் திருட்டு

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் வங்கியில் அடமானத்தில் இருக்கும் தனது நகையை மீட்க வந்த பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி ஒரு லட்ச ரூபாயை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செட்டிய மடை கிராமத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர் தனது நகையை அடகு வைத்திருந்தார். அந்த நகையை மீட்பதற்காக ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயுடன் வங்கிக்குச் சென்ற வசந்தியை வாசலிலேயே மறித்த நபர் ஒருவன், தனது பெயர் குமார் என்றும் வங்கியின் உதவி மேலாளர் என்றும் கூறியிருக்கிறான்.

வசந்தியிடம் பணத்தை வாங்கிக் கொண்ட மர்ம நபர், உங்களது அடமானக் கடனில் 30 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம் என்றும் அதற்கான விண்ணப்பம் பக்கத்திலுள்ள கடையில் விற்கப்படுகிறது என்றும் கூறியுள்ளான்.

அதனை வாங்குவதற்காகச் சென்ற வசந்தி திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர் தலைமறைவாகி இருக்கிறான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments