றெக்க, சீறு பட இயக்குனர் ரத்தினசிவா வீட்டில் திருட்டு : இரும்பு மூடியை திருடிய, கஞ்சா இளைஞர்களின் பலே களவாணித்தனம்

0 3834

சென்னையில் பட்டப்பகலில் திரைப்பட இயக்குனர் ரத்தினசிவாவின் வீட்டு முன்பு இருந்த தரைதள நீர் சேகரிப்பு தொட்டியின் இரும்பு மூடியை இளைஞர்கள் இருவர் திருடிச் சென்றனர்.

மேற்கு மாம்பலம் அண்ணாமலை நகரிலுள்ள இவரது வீடு இருக்கும் பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள், வீட்டு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துள்ளனர்.

ஆட்கள் நடமாட்டம் குறைந்ததும் வீட்டின் முன்பக்க கேட்டைத் திறந்து உள்ளே சென்று தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்புத் தொட்டியின் இரும்பு மூடியை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளனர்.

தனது குழந்தைகள் உட்பட, அந்த குடியிருப்பைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொட்டி இருக்கும் பகுதியில் விளையாடுவது வழக்கம் என்று கூறும் ரத்தினசிவா, பெரியவர்கள் உடனடியாகக் கவனித்ததால் விபரீதம் தவிர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கஞ்சா போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் இளைஞர்கள், கையில் பணம் இல்லாத நேரங்களில் இது போன்ற திருட்டுகளில் ஈடுபடுவர் என்கின்றனர் போலீசார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments