தலைநகரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : பள்ளி, கல்லூரி , திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடல்

0 5621

லைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில், பள்ளிகள், கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், உணவகங்கள், பார்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் திருமணம், துக்க நிகழ்வுகளில் 20 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments